2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

பியசேன எம்.பியின் மனு ஜனவரி 18ஆம் திகதி விசாரணை

Super User   / 2010 டிசெம்பர் 17 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

தன்னை இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்குவதற்கு கட்சி தீர்மானித்திருப்பதை எதிர்த்து திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பெரும்புலி ஹேவாகே பியசேன உயர் நீதிமன்றில் செய்த மனு மீதான விசாரணையை ஜனவரி 18ஆம் திகதி வரை நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது.

கடந்த செப்டெம்பர் 8ஆம் திகதி 18ஆவது திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமையால் தன்னை கட்சியிலிருந்து வெளியேற்ற தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் முறையிட்டுள்ளார்.

தமிழ் பேசும் பிரஜை என குறிப்பிட்டுள்ள இவர் தமிழரசுக் கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தன் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற பதில் செயலாளர் தம்மிக கித்துல்கொட ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.

தமது மனசாட்சிக்கமைய தான் 18ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தாக தனது முறையீட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னை கட்சியிலிருந்து நீக்க எடுத்த தீர்மானம் முகத்தளவிலேயே சட்டவிரோதமானதுடன் கட்சியின் யாப்புக்கும் நாட்டின் யாப்புக்கும் விரோதமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--