2021 மார்ச் 06, சனிக்கிழமை

2 கைக்குண்டுகளுடன் இருவர் சிக்கினர்

Editorial   / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்துருகிரிய, அதிவேக நெடுஞ்சாலை பாலத்துக்கருகில், இன்று (04) அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றை சோதனையிட்ட போது, அதிலிருந்து, இரண்டு கைக்குண்டுகளும், 830 கிராம் ஹெரோய்னும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் இருவரையும்  அத்துருகிரிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தெகநபர்கள், பேருவளை மற்றும் வெலிகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள், குறித்த இடத்தில் வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தமைக்கான காரணம் யாதென்பது தொடர்பில் அறிய, அவர்களை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அத்துருகிரிய  பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .