2020 நவம்பர் 25, புதன்கிழமை

ஜனாதிபதியின் 2ஆவது பதவியேற்பு; ஒரு வாரகால கொண்டாட்டம்

Super User   / 2010 ஒக்டோபர் 28 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நபீலா ஹுசைன்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாக பதவியேற்கும் நிகழ்வையொட்டி ஒரு வாரகால கொண்டாட்டத்தினை ஒழுங்கு செய்து வருவதாக ஸ்ரீலங்கா சுகந்திர கட்சி இன்று அறிவித்துள்ளது.

இந்த கொண்டாட்டங்கள் நவம்பர் 15 தொடக்கம் நவம்பர் 22வரை நடைபெறும் என கட்சி தெரிவித்தது.

1.1 மில்லியன் மரக் கண்றுகளை நடுவதோடு கொண்டாட்டங்கள் தொடங்கும். இது உலக சாதனையாக அமையும் என நீர்ப்பாசன அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.

நவம்பர் 18இல் தொடங்கும் இரண்டாவது தவணை பதவிக்காலத்தின் போது அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டுள்ள துறைமுகம் திறந்து வைக்கப்படும். அப்போது காலியிலிருந்து வரும் கப்பல் ஒன்று முதலாவதாக அம்பாந்தோட்டை துறைமுகத்துள் பிரவேசிக்கும்.

ஜனாதிபதி செயலகத்தில் 19ஆம் திகதி மு.ப 9.30 மணிக்கு பதவியேற்பு வைபவம் நடைபெறும். கிராம அதிகாரி பிரிவுகளில்1400 குறுகிய செயற்திட்டங்கள் இந்த கொண்டாட்ட காலத்தில் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க பதவியேற்பு வைபவ கொண்டாட்டங்களை ஒழுங்குபடுத்தும் பொறுப்பை ஏற்றுள்ளார்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--