2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

ரூ. 2 கோடி வெளிநாட்டு பணத்துடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

Menaka Mookandi   / 2011 ஜூன் 19 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சட்டவிரோதமான முறையில் சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களும் சிங்கப்பூர் நோக்கிப் பயணிக்கவிருந்த இலங்கையர் ஒருவரை கட்டுநாயக்கா விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் கொண்டுசெல்லப்படவிருந்த இந்த பணத் தொகையில் இந்தியா, அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகளின் நாணயத்தாள்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதிதொரு குழுவினரின் தேவைக்காக இந்த பணத்தொகை விமானம் மூலம் கொண்டு செல்லப்படவிருந்ததாக சுங்க அதிகாரிகளின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X