2021 மே 10, திங்கட்கிழமை

சிங்கராஜ வீதி தொடர்பில் ஆராய 2ஆவது குழு

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 20 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிங்கராஜ மழைக்காட்டினூடாக வீதி அமைக்கப்படுவது தொடர்பில், வன பாதுகாப்பு திணைக்களம், நில சீர்த்திருத்த ஆணைக்குழு, மத்திய சுற்றாடல் அதிகாரசபை பிரதேச செயலகம், பிரதேச சபை ஆகியவற்றின் உத்தியோகஸ்தர்களைக் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டு அதனிடம் இப்பிரச்சினையை ஆராய்ந்து சிபாரிசுகளை செய்யும் பொறுப்பு கையளிக்கப்பட வேண்டுமென குறித்த வீதி தொடர்பில் ஆராய்ந்த குழு தெரிவித்துள்ளது.

சுற்றாடல் ஆர்வளர்கள் மற்றும் வனப் பாதுகாப்பு அதிகாரிகளின் எதிர்ப்பினைத் தொடர்ந்து இந்த வீதியினை அமைக்கும் வேலைகள் நிறுத்தப்பட்டன. சிங்கராஜ வனம் உலக மரபுரிமை சொத்து என்ற வகையில் யுனெஸ்கோவினால், சுற்றாடல் அமைச்சிடம் இது தொடர்பில் அறிக்கையொன்று கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • manithan Wednesday, 21 September 2011 01:20 AM

    என்ன முட்டாள்தனம்! எங்கள் நாட்டு வளங்களை அழித்தொழிக்கும் திட்டங்களை இன்னுமா அரசாங்கம் தீட்டுகிறது! சிங்கராஜக் காடு எங்கள் தேசிய சொத்து. அதற்கு ஊறு விளைவிக்கும் உரிமை அரசாங்கத்துக்கோ வேறெவருக்குமோ அல்லது வேறு எந்த நிறுவனத்துக்குமோ இல்லை. அது கட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X