Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூன் 02 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றிய காலத்திலிருந்தே பல்வேறு அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்து வருவதாகத் தெரிவித்த கல்விஅமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கடந்த 20 வருடங்களாக ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள், இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துவந்துள்ளன என்றும் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “மாவனெல்ல அரநாயக்க மண்சரிவு, கொலன்னாவை மீதொட்டமுல்ல குப்பை மலை சரிவு உள்ளிட்ட அனர்த்தங்கள் மற்றும் தற்போது இடம்பெற்றுள்ள இயற்கை அனர்த்தம் என, அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இப்படியான அவலங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றது. இவ்வாறு பாதிப்புகள் இடம்பெற இருக்கும் பகுதிகளை அடையாளப்படுத்தி, மக்களை இடம்பெயர்ந்து செல்லுமாறு 10, 20 வருடங்களாக அரசாங்கங்கள் எச்சரிக்கை விடுத்துக்கொண்டு தான் உள்ளன.
இருப்பினும் அவ்விடங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து செல்லாமல் இருக்கின்றனர். அதனால் தான் அதிகளவானோர் உயிர் இழக்கின்றனர்” என்றார்.
2 hours ago
18 Oct 2025
18 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
18 Oct 2025
18 Oct 2025