2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

குழாயிலிருந்து கசியும் எண்ணெய் 20லீற்றர் ரூபா 600 வீதம் விற்பனை

Kogilavani   / 2011 நவம்பர் 30 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(உதய கார்த்திக்)
கொழும்பு புளூமெண்டல் பகுதியினூடாக செல்லும் எண்ணெய் குழாய் ஒன்றில் ஏற்பட்டுள்ள கசிவினால், கிரான்ட்பாஸ் ஜயந்தமல்லிமாராச்சி வீதியையொட்டி காணப்படும் கால்வாய் வழியாக மசகு எண்ணெய் வெளியேறுகிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாக குழாயிலிருந்து எண்ணெய் கசிவதால் கால்வாயின் மேற்பரப்பில் 4அங்குலத்துக்கு மசகு எண்ணெய் தேங்கி நிற்பதுடன் கால்வாய் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கிறது.

இதனால் அப்பகுதிமக்கள் குறித்த கால்வாய் வழியாக வெளியேறும் மசகு எண்ணையை மரப்பலகையால் அணையிட்டு, தேக்கி வைத்து, அதனை சட்டவிரோதமாக சேகரித்து வருகின்றனர்.

குறித்த எண்ணைக்கு அதிக கேள்வி இருப்பதனால் இந்த எண்ணையை 20 லீற்றர் 600ரூபா என்ற விலையில் சில தரகர்கள் வாங்க வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் நாம் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவிடம் வினவிய போது 'குறித்த எண்ணெய் குழாய் அரசாங்கத்தினது அல்ல: தனியாருக்குரியது. அத்துடன் அதில் வெளியேறுவது எண்ணெய் கழிவுகளே' என கருத்து தெரிவித்திருந்தார்.         


  Comments - 0

 • raja selliha Thursday, 01 December 2011 02:15 AM

  அரசாங்கமா இருந்தால் உள்ள போக வேண்டியது தானே ...........

  Reply : 0       0

  செம்பகம் Thursday, 01 December 2011 02:28 PM

  பொருப்பு வாய்ந்த அமைச்சர் கதைக்கும் கதையாயிது ஐயோ... ஐயோ..

  Reply : 0       0

  Pramila Thursday, 01 December 2011 10:30 PM

  யாருடையதாக இருந்தால் என்ன? இப்போது இதனால் மகிழ்வுறும் இந்த மக்களுக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சனைகள் தெரியாது போலும். மக்களின் பிரச்சினைகளை அரசாங்கம் தானே தீர்க்க வேண்டும். !!!!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .