2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

200 தேள்களுடன் சீனப் பிரஜை கைது

Editorial   / 2020 ஜனவரி 13 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

200 தேள்களைக் கடத்த முயற்சித்த சீனப்பிரஜை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனாவின் குவென்சூ நகர் நோக்கி பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்த போது சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினரால் சந்தேக நபர் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாக சுங்கம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் தமது பயணப் பொதியில் வைத்து தேள்களை உயிருடன் கொண்டுசெல்ல முயற்சித்துள்ளார்.

தேள்களை இலங்கையிலிருந்து வௌிநாடுகளுக்குக் கொண்டுசெல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுங்கம் கூறியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .