Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 21 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ள இடங்களில் சுமார் 1800 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் இன்னமும் 2000 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றவேண்டியுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல்ல தெரிவித்தார்.
வடபகுதியில் முன்னர் மோதல் இடம்பெற்ற பகுதிகளிலும் மீள்குடியேற்றப் பகுதிகளிலும் 31,4850 கண்ணிவெடிகள் இதுவரையில் அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் டெய்லி மிரர் இணையத்தளத்திற்கு கூறினார்.
விவசாய நிலங்கள் மற்றும் காட்டுப் பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளே இன்னமும் அகற்றப்படாமலுள்ளதாகவும் அவற்றையே அகற்றவேண்டியுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
இராணுவத்தினரின் கண்ணிவெடி அகற்றும் குழுவினர் உள்ளூர் மற்றும் சர்வதேச கண்ணிவெடி அகற்றும் குழுவினருடன் இணைந்து வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago