2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

2009 ஆம் ஆண்டின் கூட்டறிக்கையிலுள்ள விடயங்கள் குறித்துபான் கீ மூன் -ஜனாதிபதி மஹிந்த பேச்சு

Super User   / 2010 செப்டெம்பர் 25 , மு.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

2009 ஆம் ஆண்டு மே மாதம் விடுக்கப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்ட விடயங்களை முன்னோக்கிச் செல்லவேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கலந்துரையாடியதாக ஐ.நா. பேச்சாளரினால் விடுக்கப்பட்ட செய்திக் குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக அரசியல் தீர்வு, நல்லிணக்கம், பொறுப்புடைமை என்பன தொடர்பாக முன்னோக்கிச் செல்ல வேண்டியதன் அவசியம் குறித்து இருவரும் பேசியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஜனாதிபதிக்கு கிடைத்த வலிமையான அரசியல் ஆணை, இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சிறந்த சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது என ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் சுட்டிக்காட்டினார்.


வடக்கில் அபிவிருத்தி மற்றும் கல்வி நடவடிக்கைகள் என்பன தேசிய நல்லிணக்கத்தை பூரணமாக்குவதற்கானவை என ஜனாதிபதி கூறியதுடன் மீள்கட்டமைப்பு புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் உதாரணங்களையும் விளக்கினார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் பற்றியும் ஜனாதிபதி தெரிவித்தார்' என அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--