2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

நிபுணர்குழு தொடர்பாக பான்கிமூனின் விளக்கம்

A.P.Mathan   / 2010 ஜூலை 10 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து கடந்த வருடம் மே 23ஆம் திகதி ஐ.நா. அலுவலகம் வெளியிட்ட கூட்டறிக்கைக்கு அமையவே நிபுணர் குழுவினை நியமித்திருப்பதாவும் இது ஓர் ஆலோசனை வழங்கும் குழுவாகவேயன்றி விசாரணைக் குழுவாகச் செயற்படாது எனவும் ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் பான்கி மூன் அறிக்கையொன்றினை வெளியிட்டிருக்கிறார்.

அவ்வறிக்கையில்,  இந்த நிபுணர் குழுவானது சர்வதேச தர நியமங்களுக்கு ஏற்ப,   பொறுப்புடைமை விவகாரம் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்கும் எனவும், அத்தோடு இலங்கை அரசாங்கம் நியமித்திருக்கும் நல்லிணக்கம் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் தொடர்பான ஆணைக்குழுவின் செயற்பாட்டிற்கும் பெரும் உதவியாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஐ.நாவின் உதவி தொடர்ந்தும் நாட்டு மக்களுக்கு கிடைப்பதற்கேற்ப இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகத்தை சுற்றியுள்ள சூழ்நிலையை சுமூகப்படுத்துவதற்கேற்ற உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை அவர் கோரியிருக்கிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--