2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

அமெரிக்கா ஆழ்ந்த அதிருப்தி

Super User   / 2010 ஜூலை 10 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலகத்திற்கு தேவையான பாதுகாப்பை வழங்கும் படி இலங்கை அரசிடம் ஐக்கிய அமெரிக்க அரசு வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள்  ஊழியர்கள் தொந்தரவுக்குள்ளானதால் ஐக்கிய அமெரிக்கா ஆழ்ந்த அதிருப்தியடைந்ததாக இராஜாங்கத்  திணைக்கள  பேச்சாளர் மார்க் டோனர் வெளிநாட்டு செய்தி சேவை ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

"கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் முற்றுகைக்குள்ளானதையடுத்து இலங்கையிலுள்ள ஐ.நா.அபிவிருத்தித் திட்ட பிராந்திய அலுவலகத்தை மூடுவதற்கும் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியை திருப்பி அழைப்பதற்கும் ஐ.நா. தீர்மானித்தமை மற்றும் அதில் அமைச்சர் ஒருவர் வகித்த பாத்திரம் ஆகியவற்றை நாம்புரிந்து கொண்டுள்ளோம்" எனவும் அவர் குறிப்பிட்டார்

ஐக்கிய நாடுகள் சபை அங்கத்தவர் என்ற அடிப்படையில் இலங்கை அரசு ஐ.நா சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலகத்திற்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என டோனர் குறிப்பிட்டார்.

இது தொடர்பிலான எமது கவனத்தை இலங்கை அரசுக்கு கொண்டு செல்வோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--