2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

யாழ். பொதுமக்களுடன் அமைச்சர் டியூ சந்திப்பு

Suganthini Ratnam   / 2010 ஜூலை 11 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்திற்கு நேற்று சனிக்கிழமை விஜயம் மேற்கொண்ட புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ.குணசேகர, பிரதி அமைச்சர் காமின் விஜித்த விஜயமுனி சொய்சா ஆகியோர் தெல்லிப்பளையிலுள்ள வலி வடக்குப் பிரதேச செயலகத்தில் பொதுமக்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அமைச்சின் செயலாளர் ஏ.எம்.திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.


 
இந்நிகழ்வில் மங்கள விளக்கை அமைச்சர் டியூ குணசேகர, பிரதி அமைச்சர் காமினி விஜித்த விஜயமுனி சொய்சா, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கம், வலிவடக்கு பிரதேச செயலாளர் சு.முரளிதரன், காங்கேசந்துறை படைகளின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சுசந்த ரணசிங்க ஆகியோர் ஏற்றிவைத்தனர்.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கூட்டத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அமைச்சின் செயலாளர் ஏ.எம்.திஸாநாயக்க, பிரதி அமைச்சர் காமின் விஜித்த விஜயமுனி சொய்சா, அமைச்சர் டியூ குணசேகர ஆகியோர் உரையாற்றினர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--