2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

த.தே.கூட்டமைப்பு விரைவில் ஜனாதிபதியை சந்திக்கத் திட்டம்

Super User   / 2010 ஜூலை 11 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கெலும் பண்டார)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் விரைவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேசவுள்ளதாக த.தே.கூ. பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

 "நாம் விரைவில் ஜனாதிபதியை சந்தித்து வடக்கு கிழக்கின் தற்போதைய நிலை குறித்து பேசுவோம்" என டெய்லிமிரர் பத்திரிகைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்று தெரிவித்தார்.

இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் அண்மையில் இந்தியாவுக்குச் சென்று, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் இந்திய அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசியமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் 'டெய்லி மிரருக்கு'த் தெரிவிக்கையில், "இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து நாம் இந்தியத் தலைவர்களுடன் பேசினோம். அத்துடன் அரசியல் தீர்வு குறித்தும் கருத்துக்களை பரிமாறினோம்.

வடக்கில் உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குவதற்கு அரசாங்கம் தவறியுள்ளது. அப்பகுதி இராணுவ மயமாக்கப்படுகிறது. அது குறித்து நாம் கவலைகொண்டுள்ளோம். இவ்விடயத்தை இந்தியத் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தோம்" என்றார்.

"13 ஆவது அரசியல் திருத்தச்சட்டம் குறித்து பேசினீர்களா?" எனக் கேட்டபோது,
"ஆம், நாம் பேசினோம். அதன் போதாதத் தன்மை குறித்து பேசினோம்.  எமது கருத்தின்படி ஒற்றையாட்சியின் கீழ் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவது கடினம்"  என சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார். 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .