2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

யாழ். வேலணை வைத்தியசாலையில் கறுப்புப் பட்டி அணிந்து ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2010 ஜூலை 12 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், வேலணை அரசினர் வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த குடும்பநல பெண் உத்தியோகத்தரின் மரணத்தை அடுத்து வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் இன்று கறுப்புப் பட்டி அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்தியர் ஒருவரினால் கடந்த வாரம் மேற்படி குடும்பநல பெண் உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகின்றது.

இந்தப் படுகொலையினை மறைக்க முற்பட்டுள்ள வைத்தியர், அதனைத் தற்கொலையாக நம்பவைக்கும் பொருட்டு சடலத்தை தூக்கில் தொங்கவிட்டுள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், சந்தேக நபரான வைத்தியரைக் கைது செய்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தி வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .