2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

சுன்னாகம் கூட்டுறவு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லையெனப் புகார்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 12 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கடந்த இரண்டு மாதங்களாக தமக்குரிய சம்பளம் வழங்கப்படவில்லை என்று கவலை தெரிவிக்கின்றனர்.

சங்கம் பலத்த நிதி நெருக்கடிக்கு உள்ளாகிய நிலையில் காணப்படுகின்றமையால் இத்தகைய நிலைமை காணப்படுவதாகவும் ஊழியர்கள் கூறுகின்றனர். 

இதேவேளை, சங்கத்தின் அலுவலகத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் தமது சம்பளத்தை சங்கத்திற்கு நாளாந்தம் கிளைகளிலிருந்து வரும் பணத்திலிருந்து பகுதி பகுதியாக  பெற்றுக் கொள்வதாகவும்  ஏனைய ஊழியர்கள் தமது சம்பளத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .