2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச்சங்கத்திடம் வடமாகாண கூட்டுறவுச்சங்கம் விளக்கம் கோருகிறது

Suganthini Ratnam   / 2010 ஜூலை 12 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண கூட்டுறவுத் திணைக்கள கூட்டுறவு அபிவிருத்திச் சங்கத்தின் அனுமதியின்றி யாழ்ப்பாணம் சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச்சங்க பணிப்பாளர் சபை மேற்கொண்ட செயற்பாடுகள் தொடர்பாக வடமாகாண கூட்டுறவுத் திணைக்கள கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவுச்சங்கப் பணிப்பாளருமான ஜே.எஸ்.அருள்ராஜ் விளக்கம்  கோரியுள்ளார்.

இது தொடர்பான கடிதமொன்றை இவர் பணிப்பாளர் சபைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

வடக்கு கிழக்கு மாகாணசபை அமைக்கப்பட்ட 1987ஆம் ஆண்டு முதல்  இன்று வரைக்கும் சங்கத்தின் ஆளணி தொடர்பில் மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரின்  ஆளணி அங்கிகாரம் கூட்டுறவு ஆணைக்குழுவிடம் பதவிநிலை அங்கிகாரம் பெறப்படாமை, ஆணையாளரிடம் பதவி நிர்ணயம் செய்யப்பட்டவர்களுக்கு புதிய சம்பளத் திட்டத்தை அமுல் செய்வதற்கு அனுமதி பெறப்படாமை, ஜசுபி உற்பத்திச்சாலைக்கான திருத்தம் செய்தல் மற்றும் பொருள் கொள்வனவுகளின்போது உரிய முறையில் அனுமதி பெறப்படாமை, கேள்விப்பத்திரம் கோரப்படாமை, தனியார் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பியமை போன்ற நடவடிக்கைகள் தொழிற்சாலைக்கு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிறுவனத்தினால் அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட பணத்தை நுகர்ச்சித் தேவைக்கு பயன்படுத்தியமை,

சங்கத்திற்குச் சொந்தமான காணி கட்டிடத்தை கூட்டுறவு வங்கிச் சமாசத்திடம் ஈடுவைத்து பணிப்பாளர் சபையின் அங்கிகாரமின்றி 80 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டமை,

இடைநிறுத்தப்பட்ட மற்றும் பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை பணிப்பாளர் சபையின் தீர்மானம் எதுவுமின்றி மீண்டும் பணிக்கு அமர்த்தியமை சம்பளம் வழங்கியமை, பணியாளர்களை விசாரணைகளின்றி வேலை நீக்கம் செய்தமை இந்த நடவடிக்கைகள் சம்பந்தமாக கூட்டுறவு ஆணையாளருக்கு அறிவிக்காமை,

உயர் முகாமைத்துவ பதவிகளுக்கு கடந்த 12 ஆண்டுகளாக ஒருவர் நியமிக்கப்படாமை, கணக்குப் பதிவாளரை எந்த வகையான முன் அனுமதி மற்றும் பணிப்பாளர் சபையின் தீர்மானமின்றி கணக்காளராகவும் பொது முகாமையாளராகவும் செயல்பட அனுமதித்தமை,

சங்கத்தில் புதிய பதவிகளை தன்னிச்சையாக உருவாக்கி நியமனங்கள் வழங்கியமை 60 வயதிற்கு மேற்பட்டவர்களை பதவிகளுக்கு நியமனம் செய்தமை போன்ற பல்வேறு குற்றங்கள் சம்பந்தமாகவும் விளக்கம் கோரப்பட்டுள்ளது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .