2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

மட்டக்களப்பில் உள்ளூராட்சி வார நிகழ்வுகள்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 12 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ள உள்ளூராட்சி வாரத்தின் முதல் நாள் நிகழ்வுகள் மட்டக்களப்பு மாநகரசபை பிரதேசத்தில் மாநகரமேயர் திருமதி சிவகீதா பிரபாகரன் தலைமையில் இன்று திங்கட்கிழமை காலை ஆரம்பமாகியது.

இருதயபுரம் பகுதியிலுள்ள வடிகான்கள் துப்புரவு செய்யும் நடவடிக்கைகளுடன் ஆரம்பமான உள்ளூராட்சி வார நிகழ்வுகள் தொடர்ந்து 7 நாள்களுக்கு நடைபெறவுள்ளன.

வினைத்திறன்மிக்க உள்ளூராட்சி சேவைகளினூடாக நல்லதொரு எதிர்காலம் எனும் தொனிப்பொருளில் இம்முறை உள்ளூராட்சி வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

மாநகரசபை பிரதேசத்தின் சகல பகுதிகளும் இவ்வாரத்தில் தூய்மைப்படுத்தப்படவுள்ளதுடன், இறுதி நாள் நிகழ்வின்போது கலை நிகழ்வுகளும் பரிசளிப்பு விழாவும் இடம்பெறவுள்ளது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--