2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

மாணவர்களின் பாபூல் பாவனையை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2010 ஜூலை 12 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மாணவர்கள் மத்தியில் போதை ஏற்படுத்தக்கூடிய "பாபூல்" எனப்படும் பாக்கு பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் நகரப் பகுதியில் விற்பனை செய்யப்படும் மேற்படி போதை ஏற்படுத்தக் கூடிய பாபூல் எனப்படும் பாக்கினை வயது வேறுபாடிறின்றி அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

பாடசாலை மாணவர்கள் சிலர் இதற்கு அடிமையாகியுள்ள நிலையில், இந்த பாக்கினை பாடசாலைக்கு கொண்டு சென்று சக மாணவர்களுக்கு கொடுத்து பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

எனவே, பாடசாலை நிர்வாகம் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறும், மேற்படி பாக்கு சிறுவர்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் விற்பனை செய்யப்படாமலிருக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஆர்வலர்கள் கோருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .