2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

வீட்டுக்கொரு பட்டதாரியை உருவாக்குவோம்- முதலமைச்சர் சந்திரகாந்தன்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 12 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டுக்கொரு போராளி கேட்டு போராடினோம். முடிவு வெறும் பூஜ்யம் தான். மாறாக இன்று வீட்டுக்கொரு பட்டதாரியை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுப்போம். அதன் ஊடாகவாவது நமது மக்கள் நிம்மதியாக வாழ்தற்கான பாதை கிட்டும் என  கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு பேசுகையிலேயே, அவர் இதனைக் கூறினார்.

30 வருட யுத்தகாலத்தில் தமிழ் மக்களின் அவலங்கள் எழுதப்படவில்லை. அதனால் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. எனவே, மூன்று தசாப்த யுத்தத்தின் அவலங்களை நாங்கள் வெளியிடத் தீர்மானித்துள்ளோம் எனவும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--