2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

கபில்நாத் கொலை வழக்கு: சந்தேக நபர் மூவர் விடுதலை

Suganthini Ratnam   / 2010 ஜூலை 12 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் சாவகச்சேரியிலுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் மகனான கபில்நாத் கொலை தொடர்பாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் மூவர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கின் முதலாவது சந்தேக நபரான ஜீவன் என்று அழைக்கப்படும் குமாரசிங்கம் கேசவனின் தாயாரான குமாரசிங்கம் திருப்பதியம்மா, அவரது சகோதரியான குமாரசிங்கம் குகன்யா மற்றும் ஆசிரியர் கணேசானந்தராஜா தயாராஜ் ஆகியோரே விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு இன்று சாவகச்சேரி நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

யாழ். சாவகச்சேரி வர்த்தகரின் மகனான கபில்நாத் 30 மில்லியன் ரூபா கப்பம் கோரி கடந்த மார்ச் மாதம் 14ஆம் திகதி  கடத்தப்பட்டிருந்தார். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களில் ஒருவரின் வளவுக்குள் இருந்து கபில்நாத்  கடந்த மார்ச் மாதம் 27ஆம் திகதி  சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .