2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

நாடு முழுவதிலும் இன்று சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை

Menaka Mookandi   / 2010 ஜூலை 13 , மு.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பல பாகங்களிலும் இன்று சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடத்தப்படவுள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் என்.பீ.வீரகம தெரிவித்தார்.

இன்று மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகையானது, 14 மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பணிப்பாளர் கூறினார். 

குறித்த மவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்களினூடாக இந்த முன்னெச்சரிக்கை ஒத்திகை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், புத்தளம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலேயே சுனாமி முன்னெச்சரிக்கை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .