2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

பெரிய பண்டிவிருச்சானில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் போதிய உணவின்றி தவிப்பு

Suganthini Ratnam   / 2010 ஜூலை 13 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட பெரிய பண்டிவிருச்சான் கிராமத்தைச் சேர்ந்த 110 குடும்பங்களைச் சேர்ந்த 257 பேர் இன்று செவ்வாய்க்கிழமை மீள்குடியேற்றம் செய்வதற்காக அழைத்து வரப்பட்டுள்ளனர்.

பெரிய பண்டிவிருச்சான் ம.வி பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள இவர்கள், அழைத்து வரப்பட்ட நாள் முதல் இதுவரையில் போதிய உணவின்றி இருப்பதாகவும் குழந்தைகளுக்கான உணவுகள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அம்மக்கள் தெரிவித்தனர்.

நேற்றுக் காலையில் புறப்பட்ட மக்களுக்கு இரவு 8 மணியளவில் பாண் வழங்கப்பட்டது. இன்று காலை பணிஸ் வழங்கப்பட்டது. 2 மணிவரை மதிய உணவு கிடைக்கவில்லை எனவும் அவர்கள் கூறினர்.

பெரிய பண்டிவிருச்சான் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த 48 குடும்பங்களைச் சேர்ந்த 138 பேரும் பெரிய பண்டிவிருச்சான் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த 62 குடும்பங்களைச் சேர்ந்த 119 பேருமே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்கள் பாடசாலையிலிருந்து பின் அவர்களுடைய கிராமங்களுக்குச் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எவ்விதமான அடிப்படை வசதிகள் மற்றும் துப்புரவு செய்யப்படாத வீடுகளில் குழந்தைகளுடன் எவ்வாறு குடியேற முடியும் என அம்மக்கள் குறிப்பிடுகின்றனர்.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .