2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களையும் வாக்காளர் இடாப்பில் சேர்க்க வேண்டும்-பா.அரியநேத்திரன்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 14 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

"கிளிநொச்சியில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் இடாப்புப் பதிவில் தற்போது கிளிநொச்சியில் தங்கியுள்ளவர்கள் மாத்திரமே சேர்த்துக்கொள்ளப்படுவரென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எஞ்சியுள்ளவர்கள் அடுத்த வருடமே பதியப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது." இது தவறான நடைமுறையாகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலும் கருத்துத் வெளியிட்டுள்ள  அவர்:-

கிளிநொச்சியில் தங்கியுள்ளவர்கள் தவிர இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளவர்கள் இப்பதிவில் சேர்க்கப்படாமையானது பெரும் மனித உரிமை மீறலாகும்.

இவ்வாறான நிலையில் வடக்கில் தேர்தலொன்று நடைபெற்றால் பதியப்படாத மக்களின் வாக்குரிமை பாதிக்கப்படும். வாக்காளர் பதிவு நடத்துவதாக  இருந்தால் அனைவரையும் பதிவுக்குட்படுத்த வேண்டும்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பெரும் துன்பங்களை அனுபவித்த மக்களுக்கு இவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவது நல்லதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .