2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

க.பொ.த. பரீட்சையில் புதிய தரநிலையை அறிமுகப்படுத்தும் திட்டம் நிராகரிப்பு

Super User   / 2010 ஜூலை 14 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அஜந்த குமார அகலக)

க.பொ.த. சாதாரணத் தரப் பரீட்சையில் புதிய தரநிலையொன்றை அறிமுகப்படுத்தும் திட்டத்தை அமைச்சரவை இன்று நிராகரித்துள்ளது.

பரீட்சைகளில் 25-34  புள்ளிகளைப் பெறுபவர்களுக்கு N தரநிலையை வழங்கும்; திட்டத்தை கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்திருந்தார். அதிக எண்ணிக்கையானோரை க.பொ.த. உயர்தரத்திற்கு தகுதி பெறச் செய்வதே இதன் நோக்கமாகும். இதன் மூலம் க.பொ.த. உயர்தரத்திற்கு தகுதி பெறுவோரின் எண்ணிக்கை 11 சதவீதத்தால் அதிகரிக்கும் எனத் கல்வியமைச்சு தெரிவித்திருந்தது.

தற்போது A, B, C, S, W ஆகிய தரநிலைகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

குறிப்பாக, கணித பாடத்தில் குறைந்த புள்ளிகளைப் பெறுபவர்கள் உயர்தரத்திற்கு அனுமதி பெற உதவும் நோக்கத்துடன்  இத்திட்டம் வகுக்கப்பட்டதாக கல்விமைச்சின் செயலாளர் சுனில் எம். சிறிசேன டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.

எவ்வாறெனினும், இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இத்திட்டம் நிராகரிக்கப்பட்டது. இத்ததைகய திட்டத்தை அறிமுகப்படுத்துவதைவிட, மாணவர்களின் அறிவை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சர்களிடம் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--