2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

த.தே.கூ இந்திய விஜயத்தில் அம்பாறை, மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவராவது இடம்பெற்றிருக்க வேண்டும்-முதலமைச

Suganthini Ratnam   / 2010 ஜூலை 15 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கடந்த வாரம் இந்தியா சென்றபோது மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலிருந்து யாராவது ஒரு உறுப்பினரையாவது அழைத்துச் சென்றிருக்க வேண்டும். கட்சித் தலைவர்கள் மட்டும்தான் சென்றார்கள் என்று கூறுகின்றார்கள். இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் ஒரு கட்சியிலிருந்து இரண்டு உறுப்பினர்களும் சென்றுள்ளார்கள்.

கிழக்கு மாகாணத்தில் பல்வேறு பிரச்சினைகள், தேவைகள் உண்டு. அவற்றை தீர்க்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இவ்வாறு கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகரில் கலாசார மண்டபம் அமைப்பதற்கான பணிகளை ஆரம்பிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

இதற்கு கல்முனை பிரதேச செயலாளர் என்.லவநாதன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தை கலாசார மண்டப அபிவிருத்திக் குழு ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் தொடர்ந்து பேசுகையில்:-

“யுத்தம் காரணமாக இன்று வடக்கு, கிழக்கு மக்கள் பலவற்றை இழந்த நிலையில் இருக்கின்றார்கள். போராட்டம்  ஆரம்பித்த வேளையில் தமிழ் மக்களிடம் கல்வி, பொருளாதாரம், காணிகள், வளங்கள்  எல்லாம் நிறையவே இருந்தது. இன்று யுத்தம் முடிவுடைந்துள்ள நிலையில் தமிழர்கள் பலவற்றையும் இழந்து நிற்கின்றார்கள்" எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .