2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

தமிழக மீனவர் மீதான தாக்குதலுக்கு எதிராக அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2010 ஜூலை 16 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மீது இந்திய மத்திய அரசு இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்காமையைக் கண்டித்து சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அ.தி.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஜெயலலிதா, அந்நிய செலாவணியை ஈட்டுவதிலும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழக மீனவர்கள் பெரும் பங்காற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால்  அன்றாடம் துன்புறுத்தப்படுவதாகவும், அவர்கள் மீதான தாக்குதல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் ஜெயலலிதா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இந்நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கோ அல்லது இலங்கை கடற்படையினருக்கோ எதிராக இந்திய மத்திய அரசு இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை எனவும் இதனால் இந்திய  மத்திய அரசைக் கண்டித்தும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தாத தி.மு.க. அரசைக் கண்டித்தும், அ.தி.மு.க.வினரால் நாளை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .