2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

நிந்தவூர் பிரதேசசபையின் உள்ளூராட்சி வார நிகழ்வுகள்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 16 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு நிந்தவூர் பிரதேசசபை பல்வேறு நிகழ்ச்சிகளை மேற்கொண்டது.

உள்ளூராட்சி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் செயல்த்திட்டத்தின் கீழ் நிந்தவூர் பிரதேசசபைக்கு ரூபா 91 இலட்சம் பெறுமதியான  இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இத்தொகையில் ஆசிய அபிவிருத்தி வங்கி  60 வீதமான நிதியினை மானியமாகவும் 33வீதமான நிதியினை கடனாகவும் வழங்கியுள்ளது.

7 வீதமான நிதியினை நிந்தவூர் பிரதேசசபையின் நிதியிலிருந்தும் வழங்கப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ள கடனை 10 வருட கால எல்லைக்குள் செலுத்துதல் வேண்டும்.

உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு நிந்தவூர் பிரதேசசபையினால் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.உதயகுமார், மேற்படி இயந்திரத்தினை உத்தியோக பூர்வமாகக் கையளித்தார்.

படத்தில் உள்ளூராட்சி ஆணையாளருடன் அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஸாத், நிந்தவூர் பிரதேசசபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர், நிந்தவூர் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா, டாக்டர் எம்.ஹமாம் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்களையும் காணலாம்.

இதேவேளை நிந்தவூர் 5ஆம் பிரிவில் வடிகான்  அமைப்புக்கான ஆரம்ப வேலைகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதனோடு மரக்கன்றுகளும் நடப்பட்டன.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--