2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

யாழ்ப்பாணத்தில் வீட்டுத் திட்டங்களை அமைக்க வீடமைப்பு அதிகாரசபை நடவடிக்கை

Suganthini Ratnam   / 2010 ஜூலை 16 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநகர், நாவற்குழி ஆகிய பகுதிகளில் வீட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இது தொடர்பாக ஆராய்வதற்கு தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் கொழும்புத் தலைமையகத்திலிருந்து பொறியியலாளர் குழுவொன்று நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தது.

ஆறு பேர் அடங்கியிருந்த இந்தக் குழுவினர் குருநகர் ஐந்து மாடித் திட்டம் யாழ். நகரிலுள்ள தாராபுரம் வீட்டுத் திட்டம் ஆகியவற்றைப் பார்வையிட்டதுடன் நாவற்குழி வீட்டுத்திட்டத்தையும் பார்வையிட்டுள்ளனர்.

இவர்களுடன் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் யாழ். மாவட்ட முகாமையாளர் எஸ். முக்சிலாமணி தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான எம்.முத்துராஜா வீ.எச்.சாள்ஸ் ஆகொயோரும் சென்றிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--