2025 ஜூலை 03, வியாழக்கிழமை

நிறைகுறைந்த பாண் தயாரித்த பேக்கரி உரிமையாளர்களுக்கு அபராதம்

Super User   / 2010 ஜூலை 16 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(டி. பாரூக் தாஜுதீன்)

நிறைகுறைந்த பாண் தயாரித்த பேக்கரி உரிமையாளர்கள் 17 பேருக்கு நுகர்வோர் நீதிமன்ற நீதவான் லால் ரணசிங்க இன்று தலா 3750 ரூபா அபராதம் விதித்தார்.

ஜூன் 29 ஆம் திகதி புதுக்கடைப் பகுதியிலுள்ள பேக்கரிகள் மீது நிறுவை அளவை திணைக்களத்தின் விசேட படையணியினால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் மூலம், நிறைகுறைந்த பாண் தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்த  பேக்கரிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இச்சோதனையின்போது முத்திரையிடப்படாத தராசை பயன்படுத்திய இறைச்சிக்கடை உரிமையாளர் ஒருவரும் கண்டுபிடிக்கப்பட்டார் அவருக்கு நீதிவான் 1500 ரூபா அபராதம் விதித்தார்.

மேற்படி சோதனைகளையடுத்து 21 பேரை இன்று நீதிமன்றுக்கு வருமாறு உத்தரவிடப்பட்டிருந்ததாகவும் எனினும் அவர்களில் மூவர் மூவர் நீதிமன்றுக்கு சமுகமளிக்கவில்லை எனவும் அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்தார்.

ஏனைய 18 பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .