2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

நுவரெலியாவில் ஆயுர்வேத மருத்துவ முகாம்

A.P.Mathan   / 2010 ஜூலை 16 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நுவரெலியா எஸ்.தியாகு)
மத்திய மாகாண சமூக சேவைகள் அமைச்சின் அனுசரணையுடன் இன்று நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் ஆயுர்வேத மருத்துவ முகாம் ஒன்று நடைபெற்றது. மத்திய மாகாணசபை உறுப்பினரும் தமிழ் சிங்கள கிராமிய பெண்கள் அமைப்பின் தலைவியுமான விமாலி கருணாரத்தன தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இம் மருத்துவமுகாம் நிகழ்வில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

விஷேட தேவையுடைய ஒருவருக்கு முற்சக்கர கதிரை ஒன்றை பெற்றுக் கொள்வதற்கான கடிதத்தினை பிரதம அதிதி கையளிப்பதையும்  விசேட தேவையுடைய ஒருவருடைய பிரச்சினைகள் தொடர்பாக மத்திய மாகாண சபை உறுப்பினரும் தமிழ் சிங்கள கிராமிய பெண்கள் அமைப்பின் தலைவியுமான விமாலி கருணாரத்தன கேட்டறிவதையும் முகாமில் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--