Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஜூலை 16 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "கடந்த 2009 ஆண்டு ஜுலை மாதம் சர்வகட்சி குழுவை அமைச்சர் திஸ்ஸ விதாரண தலைமையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அமைத்தார். அதன் பின்னர் பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
அக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு கையளிக்கப்பட்ட போதிலும் மக்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்படவில்லை.
இதன் காரணமாக எதிர்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி இக்குழுவில் அங்கம் வகிக்கும் நானும் நாடாளுமன்ற உறுப்பினரான ஆர்.யோகராஜனும் சேர்ந்து இவ்வறிக்கையை வெளியிடவுள்ளோம்" என்றார். (R.A)
26 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago
4 hours ago