2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

விலையேற்றத்தை எதிர்த்து பியகமவில் ஐ.தே.க ஆர்ப்பாட்டம்

Super User   / 2010 ஜூலை 16 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருட்களின் விலையேற்றத்தை எதிர்த்து ஐக்கிய தேசிய கட்சி இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை பியகமவில் நடத்தியது.

 

ஐக்கிய தேசிய கட்சியின் பியகம தொகுதி அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் விஜேவர்தன தலைமையில் நடைபெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பியகம பிரதேச சபை தலைவர் பிரசன்ன சம்பத் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஜோர்ஜ் பெரேரா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது "அத்தியாவசிய பொருட்களின் விலையை குறை", "வாகன விலை குறைவு- உணவு விலை அதிகரிப்பு","1000/= வேண்டாம் எனக்கூறிய உங்களுக்கு 2500/= கிடைத்ததா?" போன்ற கோஷங்களை எழுப்பியும், சுலோகங்களை ஏந்தியும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் இறுதியில் பியகம வாராந்த சந்தைக்குச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மக்களிடையே துண்டுபிரசுரங்களை விநியோகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு பியகம வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--