2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

'ஒரு நாட்டின் தேசிய உற்பத்தியின் ஆரம்பப்புள்ளி கிராமிய அபிவிருத்தியே'

Super User   / 2010 ஜூலை 16 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு நாட்டின் தேசிய உற்பத்தியின் ஆரம்பப்புள்ளி  கிராமிய அபிவிருத்தியே என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். இன்று நடைபெற்ற மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் வாகரைக் கிளை கட்டிடத் திறப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் கிராமங்கள் தோறும் ஏற்படுகின்ற அபிவிருத்தியின் ஊடாகவே தேசிய ரீதியான அபிவிருத்தியில் தன்னிறைவு காணமுடியும். கிராமங்களின் அபிவிருத்தி என்பது இலகுவாக ஏற்படுத்தக்கூடிய ஓர் விடயமாக இல்லாதபோதும் அதனை  ஏற்படுத்தக்கூடிய வழிவகைகளை கிராம மக்களாகிய நாம் அனைவரும் மேற்கொள்ள வேண்டும்.

 இவ்வாறான கிராமிய அபிவிருத்தி சார்ந்த கட்டிடங்கள், வசதிகள் ஏற்படுத்துவதன் ஊடாக நாட்டின் சகல பாகங்களிலும் வேலையற்று இருக்கின்ற இளைஞர் யுவதிகள் இவற்றை சரியாக பயன்படுத்தி, கிராமிய அபிவிருத்திக்குச் சொந்தக்காரர்களாக மாறவேண்டும்.

கிராமங்களில் காணப்படுகின்ற அனைத்து வழங்களையும் ஒன்றுதிரட்டி அபிவிருத்திகளை நாம் மேற்கொள்ள முடியும். இதனூடாக எமது நாட்டின் தேசிய அபிவிருத்தியில் கிராமங்கள் தோறும் நாம் ஏற்படுத்துகின்ற சிறு சிறு அபிவிருத்திகளின் ஊடாக நாங்களும் பங்காளிகளாக மாற முடியும்.

எனவே கிராமங்கள் தோறும் அபிவிருத்தி என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது கிழக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் இது சிறப்பாக இடம்பெறுகின்றது என்பதை நான் கருதுகின்றேன்.

இருந்த போதிலும் எதிர்காலத்தில் இக்கிராமிய அபிவிருத்தி சார்ந்த துறைகளை விஸ்த்தரிப்பதற்காக எமது அமைச்சின் ஊடாகவும் தேசிய அரசாங்கத்தின் ஊடாகவும் வெளிநாட்டு உதவியினை பெறுவதன் ஊடாகவும் அதிகரிக்கலாம் என  நான் நம்புகிநேன் என்றார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--