2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

அடைமழையினால் நுவரெலியா மாவட்ட நீர் நிலைகளில் நீர் மட்டம் அதிகரிப்பு

A.P.Mathan   / 2010 ஜூலை 17 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


நுவரெலியா மாவட்டத்தில்  கடந்த பல நாட்களாக பெய்து வருகின்ற அடைமழையினால் இந்த மாவட்டத்திலுள்ள நீர் நிலைகளிலும் நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் உயர்வடைந்து வருகின்றது. காசல்ரீ, மவூசாகலை, கனியன், விமலசுரேந்திரபுர, பொல்பிட்டிய போன்ற நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் மேலும் உயர்ந்து வருகின்றது.

அத்துடன் நுவரெலியா மாவட்டத்திலுள்ள லக்ஷபான, டெவன், சென்கிளாயர், றம்பொடை போன்ற நீர் வீழ்ச்சிகளிலும் நீர் பெருக்கம் ஏற்பட்டு பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நீர்ப் பெருக்கம் அதிகரித்துள்ள தலவாக்கலை சென்கிளாயர் நீர் வீழ்ச்சியின் அழகிய தோற்றமே இது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--