2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

மத்திய மாகாண சுகாதார அமைச்சர் இன்று மஸ்கெலியா, மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம்

A.P.Mathan   / 2010 ஜூலை 17 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


விசாலமான கட்டிடத்தொகுதியைக்கொண்ட மஸ்கெலியா, மாவட்ட வைத்தியசாலையை பிரதேச மக்கள் உரியகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இந்த வைத்தியசாலையில் காணப்படுகின்ற குறைபாடுகள் உரியவகையில் நிவர்த்திசெய்து கொடுக்கப்படுமென்றும் மத்திய மாகாணசபையின் சுகாதார அமைச்சர் சுனில் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு இன்று 17ஆம் திகதி விஜயம் செய்து, அந்த வைத்தியசாலையின் நிலைமைகளை ஆராய்ததன் பின்பு கருத்துத்தெரிவித்தபோதே இவ்வாறு அவர்தெரிவித்தார்.

அத்துடன் மஸ்கெலியா பிரதேச மக்கள் தமது வைத்தியசேவையினை அரசாங்க வைத்தியசாலைகளில் இலவசமாக பெற்றுக்கொள்வதில் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் இந்த வைத்தியசாலைக்கு உடனடியாக எக்ஸ்ரே இயந்திரம் ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்கும் ஆய்வுகூடமொன்றை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் மத்திய மாகாணசபையின் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மத்திய மாகாணசபையின் சுகாதார அமைச்சருடன் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், முரளிரகுநாதன், முன்னாள் மத்திய மாகாண சபையின் உறுப்பினர் ரணசிங்க, அம்பகமுவ பிரதேசசபை உறுப்பினர் செல்லையா சிவசுந்தரம் ஆகியோரும் இந்த வைத்தியசாலைக்கு இன்று விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--