2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

அம்பகமுவ பிரதேச செயலகப்பிரிவில் மண்சரிவு அபாயம்

A.P.Mathan   / 2010 ஜூலை 17 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடைமழையினால் அம்பகமுவ பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் பிரதேச மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டுமென நுவரெலியா மாவட்டச் செயலாளர் அறிவித்துள்ளார்.

அம்பகமுவ பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட ஹட்டன், கினிகத்தேனை, நோட்டன், மஸ்கெலியா, வட்டவளை போன்ற பகுதிகளிலேயே மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இந்தப்பிரதேசத்தில் ஆங்காங்கே மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. கினிகத்தேனை நகரிலுள்ள அம்பகமுவ பிரதேசசபை பணிமனைக்குச் செல்லும் பிரதான பாதையின் ஒரு பகுதி மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதையின் மண்திட்டொன்று சரிந்து ஹட்டன் - கினிகத்தேனை பிரதான பதையின் ஒருபகுதியில் விழுந்துள்ளமையைப் படத்தில் காணலாம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--