2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

கொழும்பில் வீட்டுப்பணிப்பெண் அடித்துக்கொலை; இருவர் கைது

Super User   / 2010 ஜூலை 17 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு புதுச்செட்டித் தெருவிலுள்ள வீடொன்றில் பணியாற்றிய வெள்ளைச்சாமி சீதாராணி என்பவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக, கொட்டாஞ்சேனை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவரையும் அவரின் மருமகனையும் விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

44 வயதான சீதாராணி, பதுளை மாவட்டத்தின் களுகல்வத்த நமுனுகல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக அலுவலகம்  இன்று விடுத்த அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்த விசாரணைகளை கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன், மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளி ரகுநாதன் ஆகியோர் அவதானித்து வருவதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 


  Comments - 0

  • xlntgson Sunday, 18 July 2010 08:54 PM

    அடித்து கொல்ல வேண்டிய அளவுக்கு நடந்த தவறு என்னவோ? அரபு நாட்டு சங்கதிகளை மிஞ்சி விடுமோ, அரபு நாடுகளில் கொடுக்கும் சம்பளத்தை விட அதிகம் கிடைக்குமோ, இங்கே பங்களாக்களில் வேலை செய்கிறவர்களுக்கு? என் எஸ் கிருஷ்ணன் சொல்வார்: சமையல் பண்ண மெசின் பாத்திரம் கழுவ மெசின் துணி துவைக்க மெசின் என்று .அவர் காலத்தில் அதெல்லாம் இல்லை. ஆனால் இக்காலத்தில் அரவை கிரைண்டர் முதற்கொண்டு வேக்குவம் கிளீனர் வரை கண்டு பிடித்து விட்டார்கள். இன்னமும் மனிதரை மனிதர் ஏன் கடுமையாக வேலை வாங்க வேண்டும்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .