2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

வவுணதீவு பிரதேச மக்களுக்கான மருத்துவ முகாம்

A.P.Mathan   / 2010 ஜூலை 17 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசமாகிய மீள்குடியேற்றப்பட்ட வவுணதீவுப்பிரதேச மக்களின் நலன்கருதி பாட்லீட் பினான்ஸ் லிமிற்ரெட்டினரின் அனுசரணையுடன்  INNER COLOMBO LIONS CLUB இனரும் இணைந்து மட் / கன்னன்குடா மகாவித்தியாலயத்தில் இலவச வைத்திய முகாமினை இன்று சனிக்கிழமை காலை 8.30 மணிமுதல் மாலை 4.00 மணிவரை நடத்தினர்.

இந்த வைத்தியமுகாமினூடாக அப்பகுதியிலுள்ள வசதியற்ற பெரும்பாலான மக்கள் நன்மை பெற்றுள்ளனர். இதன் போது லயன்ஸ்கழகத் தலைவர் லயன்.மனோகரராசா மற்றும் பாட்லீட் பினான்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும் முன்னாள் லயன்ஸ் கழக மாவட்ட ஆளுநருமாகிய லயன் இராகவன், பாட்லீட் பினான்ஸ் நிறுவனத்தின்  பிரதி பொது முகாமையாளர் லயன் அன்ரன் ஜெராட் ஆகியோர் இம்முகாமில் கலந்துகொண்டனர். இந்த மருத்துவ முகாமில்  கண்சிகிச்சை உட்பட பல்வேறு நோய்களுக்கான வைத்தியர்களினால் சிகிச்சை அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--