2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

உள்ளூராட்சி வார கொண்டாட்டத்தின் நன்மை மாணவர் சமூகத்தை சென்றடைய வேண்டும்

Menaka Mookandi   / 2010 ஜூலை 18 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதேச  அடிப்படையில் உள்ளூராட்சி வாரங்கள் கொண்டாடப் படுவதன் பூரண நன்மை மாணவர் சமூகத்தைச் சென்றடைய வேண்டுமென்று பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர் கலாநிதி துரை மனோகரன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி வாரத்தினை கொண்டாடும் முகமாக  கண்டி மாநகர சபையினால் கண்டி டி.எஸ்.சேனாநாயகா வாசிக சாலையில் நடத்தப்பட்ட உள்ளூராட்சி நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது-

மாணவர்களைக் கொண்டு மேற்கொள்ளக் கூடிய இலகு பணிகளை நாம் வேறு வகையில் முயற்சித்து பாரிய செலவில் அல்லது பாரிய பிரச்சினையில் சிக்கிக் கொள்ளும் சந்தர்ப்பம் அனேகம் உண்டு.

அப்படியான சமூக விடயங்களை நாம் இனம் கண்டு மாணவர் மூலமாக அறிவுறுத்துவதனால் சமூகம் நன்மை அடைவதுடன் எதிர்காலச் சந்ததியினரை சரியாக வழிநடத்தவும் முடியும் என்றார். கண்டி மாநகர சபை அங்கத்தவர் எஸ்.சிவஞானம் மற்றும் நூலகத்தின் தமிழ்ப்பிரிவுத்தலைவர் எஸ்.சதாசிவம் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--