2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

கண்டி மாவட்ட ஊடகவியலாளர் கருத்தரங்கு நாளை

Menaka Mookandi   / 2010 ஜூலை 18 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நடத்தப்படும் கண்டி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு நாளை திங்கட்கிழமை கண்டி சுயீஸ் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.

இக்கருத்தரங்கில் கலந்துகொள்ளவுள்ள ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ‘யுத்தத்தின் பின் சர்வதேச சமூகம்’ என்ற தலைப்பில் உரையாற்றுவார்.
 
முற்பகல் 9 மணிமுதல் பி.ப 1.00 மணிவரை இடம் பெறவுள்ள இந்த கருத்தரங்கின் இரண்டாவது அமர்வில் "மக்கள் சபையின் மூலம் மக்களை விழிப்புட்டல்"  என்ற தலைப்பிலும் கருத்தரங்கு இடம் பெறும். பேராசிரியர் லக்சிறி பெர்னாண்டோ, சிரேஷ்ட விரிவுரையாளர் தம்ம திஸாநாயக்கா ஆகியோர் இங்கு உரை நிகழ்த்துவார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--