2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

புலனாய்வு பிரிவினர் எனக்கூறி வீடுகளை சோதனையிட முயன்றோர் கைது

Menaka Mookandi   / 2010 ஜூலை 18 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

புலனாய்வுப் பிரிவினர் என்று கூறிக்கொண்டு ஆணமடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோனிகல பிரதேச மக்களை அச்சுறுத்திய இருவரை இன்று பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள வீடுகளுக்குள் புகுந்துள்ள இவர்கள், தங்களை புலனாய்வுப் பிரிவினர் என்று அறிமுகப்படுத்தியுள்ளதுடன் வீடுகளை சோதனையிட அனுமதிக்குமாறும் கூறியுள்ளனர். இந்நிலையில், அவர்கள் தொடர்பில் சந்தேகித்துள்ள மக்கள், இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சந்தேக நபர்களில் இருவரைக் கைது செய்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தி வருகின்றனர்.

 

  Comments - 0

  • koneswaransaro Monday, 19 July 2010 03:26 AM

    காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேற்றுருவில் கண்முன்னே தோன்றுவது சாத்தியமே. கள்வர்களும் காவலர்போல் மக்கள் முன் தோன்றுவது நம்நாட்டு நிலைமையிலே சத்தியமே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--