2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

திருகோணமலை - வவுனியா வீதியிலுள்ள அறிவுறுத்தல் பலகை தனிச் சிங்கள மொழியில்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 19 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலையிலிருந்து வவுனியா செல்லும் வீதியிலுள்ள அபாயகரமான வளைவுகளில் பொலிஸாரால் வைக்கப்பட்ட "முன்னால் அபாயகரமான வளைவு அவதானத்துடன் செல்லவும்" என்ற அறிவுறுத்தல் பலகைகள் தனிச் சிங்கள மொழியில் மாத்திரமே காணப்படுகின்றன.

நாளாந்தம் நூற்றுக்கணக்கான தமிழரின் வாகனங்கள் இப்பாதையின் ஊடாகவே வவுனியா - யாழ்ப்பாணம் சென்று வருகின்றன. இதில் பல வாகன சாரதிகளுக்கு சிங்களம் கதைக்கத் தெரியுமே தவிர, சிங்களம் வாசிக்கத் தெரியாது.

இவ்வாறான நிலையில் பொலிஸாரால் தனியே சிங்கள மொழியில் அறிவுறுத்தல் பலகைகள் வைக்கப்படுகின்றமை தமிழர்களின் வாகனங்கள் விபத்துக்களில் சிக்கிவிட காரணமாக அமையலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, பொறுப்பு வாய்ந்த நிலையில் இருப்பவர்கள் தலையிட்டு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன சாரதிகளின் கோரிக்கையாக உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--