2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

சட்டத்தரணி டெஸ்ட்மன்ட் பெர்னாண்டோ காலமானார்

Super User   / 2010 ஜூலை 05 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான டெஸ்மன்ட் பெர்னாண்டோ கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இன்று காலமானார்.

ஜனாதிபதி சட்டத்தரணியான டெஸ்மன்ட் பெர்னாண்டோ 1974 ஆம் ஆண்டில் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் முதலாவது செயலாளராக தெரிவானார்.

இரு தடவைகள் இச்சங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட டெஸ்ட்மன்ட் பெர்னாண்டோ  சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் (ஐ.பி.ஏ) தலைவராக பதவி வகித்த ஒரேயொரு இலங்கையரும் இரண்டாவது ஆசியரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரின் இறுதிச்சடங்குகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .