2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

முஸ்லிம் பாடசாலைகளின் பிரச்சினைகளைத் தீர்க்குமாறு அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கோரிக்கை

Super User   / 2010 ஜூலை 06 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு உறுப்பினர்களுக்கும் பிரதி சுற்றாடல் வளத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று மாலை அமைச்சு காரியாலயத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் முஸ்லிம் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எடுத்துக்கூறிய  அவற்றுக்கு கல்வியமைச்சர் ஊடாக விரைவில் தீர்வு பெற்றுத்தருமாறு அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் பொதுச்செயலாளர் எம்.வை.பாவா  அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், இலங்கை முஸ்லிம்களின் கல்விப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுகளை உடனடியாக அமுல்படுத்த கல்வியமைச்சருக்கு அழுத்தம் கொடுக்குமாறு எம்.வை.பாவா கோரினார்.

இது தொடர்பில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவுடன் கலந்துரையாடி விரைவில் தீர்வு பெற்று தருவதாக அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பில் முஸ்லிம் கல்வி மாநாடு உறுப்பினர்கள் கல்வியமைச்சரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் அவர் உறுதியளித்தார்.

இச்சந்திப்பின் போது அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு அகில இலங்கை முஸ்லிம் முஸ்லிம் கல்வி மாநாடு நினைவு சின்னம் வழங்கி கௌரவித்தது. (R.A)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--