2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

குற்றவாளிகளை நல்வழிப்படுத்துவதே சிறந்தது - கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்

Menaka Mookandi   / 2010 ஜூலை 07 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களுக்கு ஹெரோயின் போதைப் பொருளின் பாவனையே காரணமாகிறது என்று கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் கஸ்தூரிரத்ன சுட்டிக்காட்டினார். இந்நிலையில், குறித்த குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை தண்டிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது எனக் கூறிய அவர், அவர்களை தண்டிப்பதை விட நல்வழிப்படுத்துவதே சிறந்தது என்றும் தெரிவித்தார்.

கண்டி, அலவத்துகொடை பகுதியில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ஹெரோயின் போதைப் பொருளானது, நாட்டில் பரவலாகக் காணப்படுவதால், அதன் பாவனையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது என்றார். 

இந்நிலையில், இலங்கையில் போதைப் பொருளுக்கு அடிமையான ஒருவர் சராசரியாக ஒரு நாளைக்கு 500 ரூபா முதல் 10ஆயிரம் ரூபா வரையில் செலவிடுவதாக கண்க்கிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதேவேளை, குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களைத் தண்டிப்பதன் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்று கூறிய அவர், தண்டனை பெற்று சிறைச்சாலை செல்லும் சந்தேகநபர்கள் திரும்பி வந்து நண்பர்களுடன் இணைந்து மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக சுட்டிக்காட்டினார்.

எனவே, அவர்களைத் தண்டிப்பதை விட நல்வழிப் படுத்துவதே சிறந்தது என்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--