2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

செல்லிடப்பேசி ஆபாசப் படங்களைத் தடுப்பதற்காக தொழில்நுட்ப நிபுணருக்கு நீதிமன்றம் அழைப்பு

Super User   / 2010 ஜூலை 08 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(இந்திக ஸ்ரீ அரவிந்த)
 
செல்லிடத் தொலைபேசிகளில் ஆபாச இணையத்தளங்களை பார்வையிடுவதைத் தடுப்பதற்காக தனியார் நிறு|வனமொன்றில் பணியாற்றும் தகவல்தொழில்நுட்ப நிபுணர் ஒருவரை எதிர்வரும் 13 ஆம் திகதி நீதிமன்றத்திற்குச் சமுகமளிக்குமாறு நீதிமன்றமொன்று உத்தரவிட்டுள்ளது.
பொலிஸ் திணைக்களத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு மேற்படி நிறுவனம் குறித்தும் நிபுணர் குறித்தும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது. அதையடுத்தே அவரை நீதிமன்றுக்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
செல்லிடத் தொலைபேசிகளில் ஆபாச இணையத்தளங்களைப் பார்வையிடுவதை தடுப்பதற்கான தொழில்நுட்பங்கள் குறித்து அவர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாக பொலிஸ் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு வட்டாரங்கள் டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--