2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

கஸினோவின் நிலையில் கொழும்புப் பங்குச் சந்தை: ஹார்ஷா டி சில்வா

Super User   / 2010 ஓகஸ்ட் 08 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்புப் பங்குச் சந்தையில் மேற்கொள்ளப்படும் ஊழியர் சேமலாப நிதியத்தால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான முதலீடுகளால் பாரதூரமான பின்விளைவுகள் ஏற்படலாம் எனவும் நாட்டின் பொருளாதார பின்னடைவுக்கும் இது வழிவகுக்கலாம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது.


ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹார்ஷா டி சில்வா இது தொடர்பாக கூறுகையில் கொழும்புப் பங்குச் சந்தையில் அண்மைக் காலத்தில் காணப்பட்ட திடீர் அதிகரிப்பானது பங்குச் சந்தையின் அடிப்படைகளுக்குப் புறம்பான காரணிகளால் ஏற்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.


வங்குரோத்து நிலையிலிருந்த சில கம்பனிகளின் பங்குகளின் விலைகளும் திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சில நிறுவனங்களின் பங்குகள் 300 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் கலாநிதி ஹார்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார்.


கொழும்பு பங்குச் சந்தை இன்று கஸினோவாக மாறியிருக்கிறது என விமர்சித்துள்ள ஹார்ஷா டி சில்வா இந்நிலைமையானது நாட்டில் முழுமையான பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தலாம் எனக் கூறியுள்ளார். அமெரிக்க பங்குச் சந்தை சரிவடைந்த போது அமெரிக்காவில் பெரும் பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அதேவேளை, மத்திய வங்கி தானே வரையறுத்த முதலீட்டு விதிமுறைகளுக்கு மாறாக, ஊழியர் சேமலாப நிதியப் பணத்தை பல தனியார் வங்கிகளில் முதலிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பிரச்சினைகளை எதிர்கொண்ட செலான் வங்கியிலும் இப்பணம் முதலிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .