2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

தபால்த் திணைக்கள ஊழியர்களின் பிரச்சினை தொடர்பில் அறிக்கை தயாரிக்கப்படும்:அசோக் ஜயசேகர

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 09 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(யடியன புஷ்பகுமார)

தபால்த் திணைக்களங்களில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பள முரண்பாடு மற்றும்  அவர்களின் பதவி உயர்வு  தொடர்பில் அறிக்கையொன்றை தயாரிப்பதற்கான குழுவொன்று  நியமிக்கப்படும் என தபால் அமைச்சின் செயலாளர் அசோக் ஜயசேகர தெரிவித்தார்.


இவ்வாறு தயாரிக்கப்படும் அறிக்கை சம்பள ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும் என்பதுடன், மூன்று மாதங்களுக்குள் இதற்கான தீர்வு முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் உதவியுடன் 647 பிரதான தபால் அலுவலகங்களின் வலையமைப்புடன் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அசோக் ஜயசேகர தெரிவித்தார்.  
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X