2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் சீன பிரஜையொருவர் உயிரிழப்பு

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 09 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுரைச்சோலை அனல் மின் நிலைய நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த சீனப் பிரஜையொருவர், மின் நிலைய கட்டிடமொன்றிலிருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று காலை 6 மணியளவில் இடபெற்றுள்ளது. சம்பவத்தில், 21 வயதான அய்ஸப் என்ற சீன பிரஜையே உயிரிழந்தவராவார்.

இவர், குறித்த அனல் மின் நிலைய நிர்மாணப் பணிகளை பொறுப்பேற்றுள்ள நிறுவனங்களில் ஒன்றான எஸ்.பி.சீ.சீ நிறுவனத்தில் கடமையாற்றி வந்துள்ளார் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

கடமையில் ஈடுபட்டிருந்த போதே இந்த சீன பிரஜை, கட்டிடமொன்றின் மேல் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவரது சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று கூறிய பொலிஸ் பேச்சாளர், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். (M.M)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .